நாளை தாக்கும் மெகா சுனாமி? பேரழிவு கணிப்பால் பீதியில் மக்கள்
ஜூலை 5ம் தேதி ஜப்பானை மிகப் பெரிய ஒரு சுனாமி தாக்கும் என்ற கணிப்பு வைரலாகி வருகிறது.
சுனாமி தாக்கும்
ரியோ டாட்சுகி என்ற நபர் 2011ல் ஏற்பட்ட பூகம்பத்தையும், சுனாமியையும் முன்கூட்டியே கணித்திருந்தார். மேலும், கொரோனா பேரழிவையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். இவரை ஜப்பானின் பாபா வாங்கா என்று அழைக்கின்றனர்.
இந்நிலையில், இவரது 'தி ஃபியூச்சர் ஐ சா' என்ற காமிக் புத்தகத்தில் ஜூலை 5ம் தேதி ஜப்பானில் பேரழிவு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் ஜப்பான் செல்ல வேண்டாம் எனச் சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியோ டாட்சுகி கணிப்பு
இதனால் ஹாங்காங் ஏர்லைன்ஸ் ககோஷிமா மற்றும் குமாமோட்டோ உள்ளிட்ட ஜப்பானிய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கான முன்பதிவுகளில் 80% வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக டிராவல் ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பூகம்பம், சுனாமி போன்றவற்றை முன்கூட்டியே கணிக்க வாய்ப்பே இல்லை. வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக யாராலும் சொல்ல முடியாது.
இதை நம்ப வேண்டாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் , வழக்கம் போல ஜப்பானுக்குச் சுற்றுலா வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.