கடலுக்கடியில் எரிமலை வெடித்து சிதறியதால் எழுந்த ‘சுனாமி’ - 5 நாடுகளுக்கு எச்சரிக்கை
பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால், சுனாமி ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் டோங்கா என்றால் குட்டித் தீவு உள்ளது. இந்தத் தீவில் சுமார் 1 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள தீவில் எரிமலைகள் நிலப்பரப்பின் மீதும், கடலுக்கு அடியிலும் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் டோங்கா பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது.
இதனால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, எரிமலை வெடித்த அதிர்வு காரணமாக கடல் அலைகள் கொந்தளிப்பு ஏற்பட்டு சுனாமி அலைகள் உருவானது. இதனால் கடல் அலைகள் சீற்றத்துடன் குடியிருப்பு பகுதிகளில் சீறிப் புகுந்தது. இதனையடுத்து, மக்கள் வேக, வேகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்த எரிமலை வெடித்து சிதறியதில் வெளியான கரும்புகை காரணமாக சில நிமிடங்கள் டோங்கா தீவு இரவு போல காட்சி அளித்தது. இந்நிலையில் அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, கனடா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், தீவில் நிலைமையை கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் நியூசிலாந்து ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்த சுனாமியால் மக்களுக்கு காயம் ஏற்பட்டதா? அல்லது உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Stay safe everyone ?? pic.twitter.com/OhrrxJmXAW
— Dr Faka’iloatonga Taumoefolau (@sakakimoana) January 15, 2022