ராகுல்காந்தி அணியும் டி-சர்ட் 41 ஆயிரம் ரூபாய் - பாஜக விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அணியும் டி.சர்ட் விலை ரூ.41 ஆயிரம் என பாஜக விமர்சித்துள்ளது.
தலைவர்களின் ஆடை விலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் மூன்றாவது நாளான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது.
விலையுயர்ந்த ஆடையின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு பதிலளித்த காங்கிரஸ், “ஏன், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பயமா?
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடியின் சூட் ரூ.10 விலை லட்சம் மற்றும் ரூ. 1.5 லட்சம் விலையுள்ள கண்ணாடி குறித்தும் பேசப்பட வேண்டும்” என்று பதில் ட்வீட் செய்தது.
யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி IBC Tamil
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil