விலைகொடுத்தாவது இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புகிறது : பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என ஐசிசி விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை கிரிகெட் தொடரில் தற்போதுஇந்திய அணி முன்னிலையில் உள்ளது, இந்த நிலையில் கடந்த முறை நடந்த இந்தியா வங்கதேச அணிகளுக்கான போட்டியில் இந்திய அணி டக் ஓர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி .
ஐசிசி இந்தியாவுக்கு ஆதரவு
ஐசிசி இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவது உங்களின் பார்வைக்கே தெரிகிறது. மழையால் மைதானம் மிகவும் ஈரமாக இருந்த போது ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது .
எப்படியாவது இந்திய அணியினை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விரும்புகின்றது, குறிப்பாக இந்த ஆட்டத்தில் நடுவர்களாக இருந்தவர்கள் தான் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போதும் நடுவர்களாக இருந்தனர் அவர்களுக்கு சிற்ந்த நடுவர்களுக்கான விருது வழங்க வேண்டும் என கூறினார்.