Monday, May 19, 2025

மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி - பிரதமர் மோடி விமர்சனம்..!

BJP Narendra Modi
By Thahir 3 years ago
Report

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,பாஜக அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது.

உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது; நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக விமர்சனத்தை முன்வைத்தார். பின்னர் ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்.