நாய்க்குட்டியை வாங்க முயன்று ரூ.26 லட்சத்தை இழந்த தொழிலதிபர்...!
நாய்க்குட்டியை வாங்க முயன்ற தொழிலதிபர் ஒருவர் ரூ.26 லட்சத்தை இழந்த சோகச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாய்க்குட்டியை வாங்க ரூ.26 லட்சத்தை இழந்த நபர்
உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷரத் ஸ்ரீவஸ்தவா என்பவர் சைபீரியன் ஹஸ்கி நாய்க்குட்டியை வாங்கும் முயற்சியில் ரூ.26 லட்சத்தை இழந்துள்ளார்.
இந்தியாவில் ரூ.50,000க்கு கிடைக்கும் இந்த நாய்க்குட்டி அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், இந்த இனத்தின் நாய்க்குட்டியை வாங்க ஸ்ரீவஸ்தவா தேடும் போது, இந்தியாவில் அரிய வகை நாய்க்குட்டிகளை வழங்குவதாகக் கூறிய ஐஸ்வாலைச் சேர்ந்த செல்ல நாய் விற்பனை நிறுவனத்தின் மொபைல் எண் இவருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி இவர் அந்நிறுவனத்திற்கு பல தவணைகளில் சுமார் ரூ.26 லட்சத்தை செலுத்தியுள்ளார். அவர் கடைசியாக செலுத்திய தொகை ரூ.2 லட்சமாகும். வங்கி பரிமாற்றம் மூலம் இப்பணத்தை ஷரத் செலுத்தியுள்ளார்.
ஆனால், பணத்தை வாங்கிக்கொண்ட அந்நிறுவனம் நாய்க்குட்டியை அவருக்கு வழங்கவில்லை. இதனையடுத்து, ஷரத் செலுத்திய தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து, ரூ. 7 லட்சத்தை மோசடி செய்தவர்கள் ஷரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
உடனே, இது தொடர்பாக ஷரத் காவல் நிலையத்தை அணுகினார். ஆனால், போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனையடுத்து, ஷரத் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், லக்னோ போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, நாய்க்குட்டியை வாங்க முயன்ற தொழிலதிபர் ஒருவர் ரூ.26 லட்சத்தை இழந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
