Thursday, Jul 3, 2025

டிரம்பை நீக்கனும்; நான் இல்லையென்றால் தேர்தலில் தோற்றிருப்பார் - எலான் மஸ்க்

Donald Trump United States of America Elon Musk
By Sumathi a month ago
Report

நான் இல்லையெனில் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் செயல்

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அவரது நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ் துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.

trump - elon musk

அவரது ஆலோசனையின்படி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடங்கி பல நிதி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து டிரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் வெடித்தது. தொடர்ந்து சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.

இந்த 12 நாட்டினர் அமெரிக்கா செல்ல தடை - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

இந்த 12 நாட்டினர் அமெரிக்கா செல்ல தடை - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

எலான் மஸ்க் விமர்சனம்

இந்நிலையில், டிரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது மற்றும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

டிரம்பை நீக்கனும்; நான் இல்லையென்றால் தேர்தலில் தோற்றிருப்பார் - எலான் மஸ்க் | Trump Would Lost The Election Says Elon Musk

இதனால் கோபமடைந்த எலான் மஸ்க், ''நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். 'நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இருவருக்குமிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். துணை அதிபர் ஜேடி வான்சை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.