20ம் தேதி வரைதான் டைம்.. ஹமாசுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப் - அதிபராக பதவியேற்கும் முன்பே அதிரடி!
20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று ஹமாசுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ்
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1,139 பேர் பலியாகினர்.
அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலிலிருந்து 251 பேரைக் காசா முனைக்குப் பணய கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றது.இதையடுத்து, இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் நடந்த போவதாக அறிவித்த நிலையில் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் பணய கைதிகள் சிலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் 101 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது.
டிரம்ப்
தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நடைபெற்று வரும் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கத்தாரில் போரை நிறுத்தவும், பணய கைதிகளை மீட்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், 20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இலையென்றால் மத்திய கிழக்கு நகரம் வெடிக்கும் என்று ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.