என் நோபல் பரிசு டிரம்புக்குதான் - உருகும் வெனிசுலா மச்சாடோ!
டிரம்ப் தான் ரியல் ஹீரோ என மச்சாடோ புகழாரம் சூட்டியுள்ளார்.
நோபல் பரிசு
கடந்த 2025 அக்டோபரில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ஆம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும்.
இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அதிபர் டிரம்ப் அவரை வெனிசுலாவின் அடுத்த தலைவராக ஏற்கத் தயங்குவதாகத் தெரிகிறது.
மச்சாடோ உருக்கம்
மச்சாடோ குறித்து டிரம்ப் கூறுகையில், அவர் ஒரு நல்ல பெண்மணி, ஆனால் அவருக்கு வெனிசுலா நாட்டிற்குள் போதுமான ஆதரவோ அல்லது மரியாதையோ இல்லை என தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
அவரது உதவியாளராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றுள்ளார். இவருக்கு அமெரிக்கா நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளது.