அமெரிக்க அதிபராக ட்ரம்ப் செய்த இறுதி செயல் என்ன தெரியுமா?

president america kamala harris
By Jon Jan 20, 2021 02:37 PM GMT
Report

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார். நீண்ட கலவரங்களுக்குப் பிறகு ஜோ பைடனின் பதவியேற்பு வாஷிங்டனில் இன்று நடைபெற இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்புக்கும் பதவியில் இன்று தான் கடைசி நாள். அமெரிக்க அதிபராக ட்ரம்ப்பின் பதவிக்காலம் அமெரிக்காவுக்கு போதாத காலமாக அமைந்தது.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் பல குழப்பங்களை உருவாக்க முயன்று அனைத்திலும் தோல்வியை எதிர்கொண்டார். தற்போது இரண்டாவது பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கிறார். அதன்மீதான விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது. ட்ரம்ப் இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பதவியிலிருந்து விலகும் முன்பாக ட்ரம்ப் செய்த பல செயல்கள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தனக்குள்ள பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமானவர்கள் பலருக்கும் பல்வேறு வழக்குகளிலிருந்து பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.