டிரம்பினை நீக்க கண்டன தீர்மானம் - எதிர்க்கட்சி தீவிரம்
அமெரிக்க பாராள மன்ற வன்முறை சம்பவத்துக்கு காரணமான அதிபர் டிரம்ப்பை பதவி விலக செய்யும் பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியை, ஜனநாயக கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார் , அவரது வெற்றியை உறுதி செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்காக, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் கூடியது. அப்போது, பார்லிமண்ட் கட்டடத்தின் முன்பு கூடிய டிரம்பின் ஆதரவாளர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டன்ர் இந்த கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்களும், தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் 25வது சட்ட திருத்தத்தை கொண்டுவர, ஜனநாயக கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இது, அதிபரை பதவியில் இருந்து விலக்க, துணை அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தமாகும். இதற்கு ஆதவு தருமாறு சபாநாயகர் நான்சி பெலோசிக்கு ஜன நாயக கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
ஒருவேளை சட்ட திருத்த ஆதரவு கிடைக்கவில்லை என்றால்.டிரம்ப்புக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளையும், ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.