ட்ரம்ப்புடன் பேசுவேன்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிக்காலத்தில் இன்னும் 10 நாட்களே பாக்கி உள்ளன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையின் ஈடுபட்டனர்.
வன்முறையில் தூண்டும் விதத்தில் செயல்படுகிறார் என ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த வரக்கூடிய நாட்களில் என்ன மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் என பலரின் எதிர்பார்த்து உள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே,
“அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது குடியரசு கட்சிக்கு மட்டுமல்ல அமெரிக்க ஜனநாயகத்திற்கே அவமானம்.
அதனால் தான் எங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோம். நான் ட்ரம்ப்புடன் போனில் பேச முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.