இந்த 18 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது - டிரம்ப் கடும் உத்தரவு

Donald Trump United States of America
By Sumathi Dec 18, 2025 10:37 AM GMT
Report

அமெரிக்காவிற்குள் நுழைய அதிரடியாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பயணத் தடை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களை கூறி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார்.

donald trump

அதன்படி ஆப்கானிஸ்தான், ஈரான், ஏமன், சோமாலியா, சிரியா, லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அறிவிப்பு

மேலும் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது.

ஸ்பீடாக நகர்ந்த எஸ்கலேட்டர்; உயிரை காப்பாற்ற போராடிய மாணவர்கள் - வீடியோ வைரல்

ஸ்பீடாக நகர்ந்த எஸ்கலேட்டர்; உயிரை காப்பாற்ற போராடிய மாணவர்கள் - வீடியோ வைரல்

பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவர்களை ஆவணதாரர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த தடை உத்தரவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.