கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கலாம் - டிரம்ப் சொன்னதன் பின்னணி என்ன?
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்கலாம் என டிரம்ப் பேசியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் தனது புதிய அரசிற்கான முக்கிய துறைகளின் நிர்வாகிகளை நியமித்து வருவதோடு, அமெரிக்காவில் வர உள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்தும் பேசி வருகிறார்.
கனடா மீது வரி
அதிபரான உடன் முதல் கையெழுத்தாக மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு 25% அதிக வரி விதிப்பேன் என்றும், அந்த நாடுகளிருந்து அமெரிக்காவின் உள்ளே வரும் போதைப்பொருள் நிற்கும் வரை இந்த கூடுதல் வரி தொடரும் என தொடரும் அறிவித்தார்.
இதனையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர்கள் பேசியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, 'அமெரிக்கா 25% வரி விதித்தால் கனடாவின் பொருளாதாரம் அழிந்துவிடும்' என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், "ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலரை சுரண்டாமல் கனடாவால் வாழமுடியாது என்றால், அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம். அதன் ஆளுநராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கலாம்" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.