உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த எனக்கு ஒரு நாள் போதும் : முன்னாள் அதிபர் டிரம்ப்

Donald Trump Ukraine Russian Federation
By Irumporai Mar 06, 2023 09:16 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் :

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அதில் பேசியுள்ள டிரம்ப் தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது.

உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த எனக்கு ஒரு நாள் போதும் : முன்னாள் அதிபர் டிரம்ப் | Trump Speech Stop The Ukraine Russia War

  அதிபர் விளக்கம்

நான் அதிபராக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். ஆனாலும் இதுபோன்ற போரை நடத்த விட்டிருக்க மாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறத? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ரஷ்ய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது. மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.