துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பிய டிரம்ப்! வெளியான பரபரப்பு காட்சிகள்

Donald Trump United States of America World
By Vinoja Apr 26, 2026 04:40 AM GMT
Report

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பின் நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததுள்ளது. இதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் ஒரு முக்கியமான விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில் (இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 7 மணியளவில்), வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பிய டிரம்ப்! வெளியான பரபரப்பு காட்சிகள் | Trump Speaks After Shots Fired At White House

அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் டிரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அவர்கள் நலமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் வளாகத்திற்குள் நான்கு முதல் ஆறு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் தெரிவித்துள்ளார். இந்தச் சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பிய டிரம்ப்! வெளியான பரபரப்பு காட்சிகள் | Trump Speaks After Shots Fired At White House

விருந்தில் பங்கேற்ற சுமார் 2,600 பேர் "கீழே குனியுங்கள்!" என்ற எச்சரிக்கை கூச்சலைக் கேட்டவுடன், அச்சத்தில் அங்கிருந்த மேஜைகளின் அடியில் தஞ்சமடைந்ததாக தெரிகிறது. அதே சமயம், அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் அந்த இடத்தைக் கைப்பற்றி நிலைமையைச் சீர்செய்துள்னர். 

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான தன் பதிவில் டிரம்ப், “பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்” என பாராட்டியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ள நிலையில் கைவிலங்குடன் நபரொருவர் கீழே விழுந்து கிடக்கும் வகையிலான புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார். எனினும் அது சந்தேகநபரின் புகைப்படமா என்பது குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.