அமெரிக்கா நரகத்தை நோக்கி செல்கின்றது : ஆவேசமான டிரம்ப்
அமெரிக்கா தற்போது நரகமாக போவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கும் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி கடும் சர்சையினை ஏற்படுத்தியது . ஆகவே இதனை மறைக்க டிரம்ப் தனது கட்சி நிதியிலிருந்து இந்திய மதிப்பின் படி ரூ 1,06,84,375 கோடி பணம் கொடுத்தாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக டிரம்பிற்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது , இந்த வழக்கானது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றது. இதனையடுத்து, நேற்று டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நியூயார்க் நீதிமன்றத்தில் சட்டமுறைப்படி போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர். இந்நிலையில்,ஆபாச பட நடிகையுடன் தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
நரகமாக மாறிவருகின்றது
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து அச்சமின்றி நாட்டை பாதுகாப்பது தான்.
அமெரிக்கா தற்போது நகரத்திற்கு போகிறது எனக்கு பெரிய ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட, இப்படி நடந்து இருக்க கூடாது என கூறுகின்றனர்.
தற்போது என்னை சுற்றி வழக்கு இருப்பதற்கு காரணம் வர உள்ள 2024 தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த பொய் வழக்குகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது, இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்