அமெரிக்கா ராணுவத்தில் வரும் அதிரடி மாற்றம் - உலகளவில் எதிர்ப்பை சந்திக்க உள்ள டிரம்ப்
அமெரிக்கா ராணுவத்தில் திருநங்கைகளுக்கு தடை விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ளார்.
தனது புதிய அரசிற்கான முக்கிய துறைகளின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அந்த வகையில் புதிதாக அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதற்கு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமை வகிப்பார்கள் என அறிவித்துள்ளார்.
திருநங்கைகளுக்கு தடை
இந்நிலையில் அமெரிக்கா ராணுவத்தில் உள்ள திருநங்கைகளை நீக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் 15,000 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணியாற்றி வருகிறார்.
இவர்களை அனைவரையும் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் எனவே அவர்கள் ராணுவ சேவை செய்ய தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இனி எதிர்காலத்திலும் அவர்கள் ராணுவத்தில் சேர முடியாது. இந்த திட்டத்தை மசோதாவாக கொண்டு வந்தால் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். எனவே நிர்வாக உத்தரவாகக் கொண்டு வந்து உடனடியாக அதை அமல்படுத்த உள்ளார்.
அவசர நிலை
உலக நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமை, பாலின சமத்துவம் தொடர்பாக குரல் எழுந்து வரும் நிலையில், டிரம்ப் அவர்களை பலவீனமாக கருதி ராணுவத்தில் தடை விதிப்பது சர்வதேச அளவில் எதிர்ப்பை உருவாக்கும் என தெரிகிறது.
மேலும், அவசர நிலையை அமல்படுத்தி, ராணுவத்தை வீதியில் நிறுத்தி சட்ட விரோதமாக குடியேறிய மக்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கும் ஆயுதபடைக்கும் மோதல் போக்கு ஏற்படும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.