டிரம்ப் மருமகனின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரையா?
முன்னாள் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மருமகனின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை .டிரம்பின் ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் வர்த்தகப் போர், ஈரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டது, ஜார்ஜ் ஒயிட் படுகொலையால் நிகழ்ந்த இனக்கலவரம், கொரோனா பரவல் இதை சுட்டிக்காட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்பின் மருமகனும் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகரின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவை சீரமைத்ததை பாராட்டும் வகையில் இந்த அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு டிரம்பின் பெயரும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.