போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் டிரம்புக்கு இடமில்லை!

By Fathima Oct 06, 2021 09:50 AM GMT
Report

பிரபல நாளிதழான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை.

டிரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிக்கிடப்பட்டுள்ளது.

400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதால் அவரால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என போர்ப்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வெளியான செய்திக்குறிப்பில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை டிரம்ப் தவறவிட்டுவிட்டதாகவும், டிரம்ப் யாரையாவது குறைகூற வேண்டுமெனில், அவரில் இருந்து தான் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு முன்பு, தன்னால் அரசையும் தொழிலையும் ஒரே சமயத்தில் நடத்தி விட முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கூரத்தக்கது.