உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள்.. இந்தியர்கள் யாரும் இல்லை - லிஸ்ட பாருங்க

Donald Trump Elon Musk World
By Sumathi Apr 17, 2025 12:50 PM GMT
Report

உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

செல்வாக்கு மிகுந்தவர்கள்

உலகில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை அவ்வப்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம் மேகசின் வெளியிட்டு வருகிறது.

trump - elon musk

சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்படும்.

திருநங்கைகளை பெண்களாக கருதமுடியாது; அது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

திருநங்கைகளை பெண்களாக கருதமுடியாது; அது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

இந்தியர்கள்?

அந்த வகையில், 2025 -ஆம் ஆண்டில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ், டெஸ்லா நிறுவன சி இ ஒ எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

yunus

அதேபோல், ஜேடி வான்ஸ், ராபர்ட் கே ஃபென்னடி ஜேஆர், கீர் ஸ்டார்மர், ஜேவியர் மிலேய், டெட்ரோஸ் அதோனம், கேப்ரியேசுஸ், பிரைட்ரிச் மெர்ஸ் ஆகியோரும் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஷாக்சி மாலிக், பாலிவுட் நடிகர் ஆலியா பட் உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை.