ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : விரைவில் கைதாகிறாரா டிரம்ப்?
ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் குற்றத்தை மறைத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பு மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
டிரம்ப் மீது வழக்கு
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது, அமெரிக்க அதிபர் வராலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
விசாரணைக்கு வருகின்றார்
76 வயதான டொனால்டு டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதனை மறைப்பதற்காக நடிகைக்குத் தேர்தல் பரப்புரைக்கான நிதியில் இருந்து ட்ரம்ப் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது,இதை அடிப்படையாகக் கொண்டு தான் டிரம்பு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப் தற்போது புளோரிடா மாகாணத்தில் உள்ள நிலையில் விசாரணைக்காக அவர் நியூயார்க் வர வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.