அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டிய டிரம்ப் - அதிர்ச்சி தகவல்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதில் உச்சக்கட்டமாக டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை இருநாடுகளுக்கும் இடையில் சுமூக போக்கு ஏற்படவில்லை.
இதனிடையே கிம்மை தன் நண்பன் என்று வெளிப்படையாக சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் - கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர். அதில் கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், 'அவர் ஒரு பைத்தியக்காரன்' என்று சொல்லியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.