90 நாட்களுக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு - அமெரிக்காவின் முடிவுக்கு காரணம் என்ன?
அமெரிக்கா சீனாவுக்கு மீதான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தை ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு 145 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த மே மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின.
வரி நிறுத்திவைப்பு
இதில் இரு நாடு களும் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு ஏதுவாக வரிவிதிப்பை பரஸ்பரமாக 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில்,
‘‘சீனா மீதான வரிவிதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதமாகவும், அமெரிக்காவில் சீன பொருட்களுக்கான இறக்குமதி 30 சதவீதமாகவும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.