நிருபர் கேட்ட அந்த கேள்வி; வெளியே போ.. ஆத்திரமடைந்த டிரம்ப்!

Donald Trump United States of America Qatar
By Sumathi May 22, 2025 02:30 PM GMT
Report

நிருபரை டிரம்ப் கடுமையாக சாடிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

நிருபர் கேள்வி 

அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார்.

donald trump

அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாக கத்தார் பிரதமர் தெரிவித்தார். உடனே டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுவதாக கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பும் - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவும் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான நிறவெறி நிலவுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பூனையின் உடலில் விநோத பொருள்; ஜெயிலில் அதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

பூனையின் உடலில் விநோத பொருள்; ஜெயிலில் அதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

ஆத்திரமடைந்த டிரம்ப்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், என்பிசி செய்தி நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளர் கத்தார் வழங்கும் விமானம் குறித்த கேள்வியை முன்வைத்தார். இதனால் கோபமடைந்த டிரம்ப், ``நீங்க என்ன பேசுறீங்கனு உங்களுக்கே தெரியுமா? நீங்க இங்க இருந்து உடனே வெளியே போகணும்.

நிருபர் கேட்ட அந்த கேள்வி; வெளியே போ.. ஆத்திரமடைந்த டிரம்ப்! | Trump Angry For Reporter Question About Qatar

இந்த நிகழ்வுக்கும் கத்தார் வழங்கும் ஜெட் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்? அவங்க அமெரிக்க விமானப்படைக்கு ஒரு ஜெட் விமானத்தைக் கொடுக்கிறாங்க. அது ஒரு பெரிய முக்கியமான விஷயம். நாங்க இன்னும் நிறைய விஷயங்களைப் பத்தி பேசிட்டு இருக்கோம்.

தென்னாப்பிரிக்காவுல வெள்ளையர்களுக்கு எதிராக நடக்கும் விவகாரம் குறித்து பேசாம இந்த தலைப்புலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறீங்க. நீங்க ஒரு மோசமான நிருபர். முதல்ல, ஒரு நிருபரா இருக்க தேவையான போதுமான புத்திசாலித்தனம், அறிவு உங்ககிட்ட இல்ல. நீங்க திரும்பவும் உங்க செய்தி ஸ்டுடியோவுக்கு போயிடுங்க.

அந்த நிறுவனத்தை நடத்துறவங்க விசாரிக்கப்படணும். நீங்க அந்த நெட்வொர்க்கை நடத்துற விதத்துல அவங்க ரொம்ப மோசமானவங்கனு தெரியுது. நீங்க ஒரு அவமானம். இனிமே உங்ககிட்ட இருந்து எந்த கேள்வியும் வரக்கூடாது. அமெரிக்க விமானப்படைக்கு வழங்கப்பட்ட ஒரு ஜெட் விமானம் நல்ல விஷயம். அவர்கள் ஜெட் விமானத்துடன் கூடுதலாக 5.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளையும் வழங்கினர் எனத் தெரிவித்துள்ளார்.