அமெரிக்கா பாராளுமன்ற தாக்குதல் நாஜி தாக்குதலைப் போன்று இருந்தது - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
அமெரிக்காவில் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல் நாஜி தாக்குதலை ஓத்திருந்ததாக அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக கடந்த வருடம் ஜோ பைடன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியை ஏற்க முடியாமல் பல வகையில் வழக்குகளை தொடர்ந்தார்.
ஆனால் அவை அணைத்து பலனளிக்கவில்லை. அதனை தொடர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பல வகை போராட்டம் நடத்தினர். குறிப்பாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தாக்குதல் நாஜி தாக்குதலைப் போன்று இருந்ததாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். இதுதொடர்பாக பேசிய அவர், “ஜனாதிபதி டிரம்ப் ஒரு தேர்தல் மற்றும் நியாயமான தேர்தலின் முடிவுகளை தடுக்க முயன்றார்.
பொய்களால் மக்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டத்தை அவர் நாடினார். நாஜிக்கள் 1938-ல் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை மேற்கொண்டனர், அதேபோல், கடந்த புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட டிரம்பின் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள்.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதியாக திகழ்பவர் டிரம்ப், அவர் முதுகெலும்பு அற்றவர்” என்று அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறினார்.