டிரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்

twitter banned trump
By Jon Jan 11, 2021 07:40 PM GMT
Report

அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது. இந்த நிலையில்,அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண் என தெரியவந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட காரணத்தால் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் முழுமையாக முடக்கியது.

இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர், இந்திய பெண்ணான விஜயா கடே (45) என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார்.

அங்கு அவரது தந்தை மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயன பொறியாளராக பணிபுரிந்தார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்துள்ளார்.

தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.