ஷேன் வார்ன் மரணத்திற்கு உண்மையான காரணம் இதுவா? - 4 நாட்களுக்கு முன்பே போட்ட ட்வீட்

Australiancricketteam shanewarne RIPShanewarne
By Petchi Avudaiappan Mar 04, 2022 06:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணமடைந்துள்ள நிலையில் அவரது மரணம் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு பங்களாவில் மயங்கி கிடந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ஷேன் வார்ன்  ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். 

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஷேன் வார்ன் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் மிகவும் இளமையாக, நல்ல உடற்கட்டுடனும் உள்ளார். அதனை குறிப்பிட்டு ஜூலை மாதத்திற்குள் கடும் உடற்பயிற்சி மூலம் இதே நிலைமைக்கு திரும்பப்போகிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.

 மேலும் இதற்காக பயிற்சியை தொடங்கப்போகிறேன் எனக் குறிப்பிட்ட வார்ன் இதனை ஒரு சவாலாக எண்ணி செய்துள்ளார். தொடர்ச்சியாக அளவுக்கு  மீறிய உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் 50 வயதை கடந்துவிட்ட ஷேன் வார்ன் தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவைகளை இருந்து வந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

எனவே இந்த மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.