பேருந்து மீது லாரி மோதி 18 பேர் பலி - சோகத்தில் மக்கள்
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற லாரி பேருந்து மீது மோதியதில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி என்ற இடத்தின் நெடுஞ்சாலையோரம் ஹரியானாவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் நோக்கி சென்ற பேருந்து பழுதாகி நின்றது. இதனால் பயணிகளில் சிலர் பேருந்து கொள்ளும் சிலர் சாலை ஓரமும் அமர்ந்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.