குவாட்டர் பாட்டிலுடன் சைட் டிஷ்ஷாக உயிர் கோழி வழங்கிய டிஆர்எஸ் கட்சி நிர்வாகி
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் நிர்வாகி ஒருவர் ஆண்களுக்கு குவாட்டர் பாட்டிலுடன் உயிர் கோழி வழங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குவாட்டர் பாட்டிலுக்கு சைட் டிஷ்
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் நாளை விஜயதசமி அன்று தேசிய கட்சி தொடங்குவதன் அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளார்.

இதை கொண்டாடும் வகையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜனாலா ஸ்ரீஹரி என்பவர் 200 நபர்களுக்கு தலா ஒரு குவாட்டார் பாட்டிலுடன் 200 உயிர் கோழிகளை வழங்கியுள்ளார்.

குவாட்டர் பாட்டில் மற்றும் உயிர் கோழி வழங்கும் நிகழ்வில் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கட்சித் தலைவர் கே.டி.ராமராவ் ஆகியோரின் மாலையிடப்பட்ட கட் அவுட்களுக்கு முன்னிலையில் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
"TRS on mission of Building new India, ये केजरीवाल की संगत का तो असर नहीं है?'
— Ashish Sood (@ashishsood_bjp) October 4, 2022
TRS leader Rajanala Sriha openly distributing alcohol & chicken for KCR &@KTRTRS before announcement of their new National Party.@BJP4Telangana pic.twitter.com/1Pg5kwFESi