‘ஜெய் பீம்' படத்தில் வக்கீல் சந்துருவாக நடிக்க முதல் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

jaibhim ஜெய் பீம் சூர்யா விஜய் சேதுபதி
By Petchi Avudaiappan Dec 13, 2021 08:09 PM GMT
Report

‘ஜெய் பீம்'  படத்தில்  வக்கீல் சந்துருவாக நடிக்க முதல் நடிக்கவிருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் சில காட்சிகளில் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது. ஜெய்பீம் தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலராலும் பாராட்டப்பட்டது. 

‘ஜெய் பீம்

இதனிடையே தீரன் அதிகாரம் ஒன்று', 'ஜெய் பீம்', 'வலிமை' படங்களின் கலை இயக்குநர் கதிர், சென்னை அருகே உள்ள வானகரத்தில் திருமண மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார். இதன் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் ஓவியர் டிராட்ஸ்கி மருது நடிகர் சூர்யா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியதாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 

அப்போது முதலில் இந்த படத்தை சிறிய அளவில் பண்ண நினைத்ததாகவும், பின் விஜய் சேதுபதி வைத்து படம் பண்ண முடிவு செய்யப்பட்டதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் படம் குறித்த முழு திட்டம் வந்தது நானே இதை ஏன் பண்ணக்கூடாது என கேள்வி எழுந்தது. கடைசில் வக்கீல் சந்துருவாக தான் நடித்தாகவும் சூர்யா கூறியதாக டிராட்ஸ்கி மருது தெரிவித்துள்ளார். 

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.