‘‘டீ கடை ராஜா நாங்க நாளைய இந்தியாதாங்க’’ - இணையத்தில் ட்ரெண்ட்டாகும் EngineersDay

twitter trending EngineersDay Visvesvaraya
By Irumporai Sep 15, 2021 10:12 AM GMT
Irumporai

Irumporai

in கல்வி
Report

எப்போது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டபோதே அப்போதே இன்ஜினியரிங்கும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கான தேவையை சாத்தியப்படுத்துவதும், எளிமைப்படுத்துவம் தான் இன்ஜினியரிங்,இதை படித்தவர்கள் தான் இன்ஜினியர்கள் இப்படிப்பட்ட இன்ஜினியர்களை கொண்டாடம் நாள் தான் இன்ஜினியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .

இன்ஜினியரிங் டே வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் செப் 15ம் தேதி இன்ஜினியர்கள் தினம் கொண்டாட்ப்படுகிறது. இந்த செப் 15ம் தேதி தான் சர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் . அவர் தான் இந்தியாவின் இன்ஜனியரிங் தந்தையாக பார்க்கப்படுகிறார்.

1861ம் ஆண்டு செப் 15ம் தேதி கர்நாடக மாநிலம் முந்தெனஹள்ளி என்ற சிறிய கரிாமத்தில் பிறந்தவர் தான் விஸ்வேஸ்வரைய்யா, இவர் புனேவில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்றார்.

‘‘டீ கடை ராஜா நாங்க  நாளைய இந்தியாதாங்க’’  - இணையத்தில் ட்ரெண்ட்டாகும் EngineersDay | Trnding Engineersday Twitter

இவர் விவசாய நீர் பாசனம் மற்றும் இயற்கை வெள்ள பேரிடர் மேலாண்மை துறைகளில் சிறப்பாக பயிற்சி பெற்றவர். 1903ம் ஆண்டு காதக்வஸ்லா நீர் தேக்கத்தில் தானியங்கி மதகை இவர் தான் வடிவமைத்தார். கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜா சாகர் அணையை இவர் தான் தலைமை பொறியாளராக இருந்து கட்டி முடித்தார்.

இதே போல ஹைதராபாத் நகரில் வடிவமைப்பில் வெள்ள நீர் வடிகால் கட்டமைப்பை இவர் தான் உருவாக்கினார். 1917ம் ஆண்டு விஸ்வேஸ்ரவையா காலேஜ் ஆப் இன்னினியரிங் என்ற கல்வி நிறுவனத்தையும் உருவாக்கினார்.

1955ம் ஆண்டு இவருக்க பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளை நாம் இன்ஜினியர்கள் தினமாக கொண்டாடுகிறோம். தற்போது நம் நாட்டில் ஏகபட்ட இஞ்சினியர்கள் உள்ளனர் பட்டம் படித்து தனது திறமைக்கேற்ற வேலை கிடைக்காத காரணத்தால் மாற்று துறையில் பணியாற்றி வருகின்றனர்.

டீ கடை ராஜா நாங்க : 

ஆனாலும் கஷ்டமே ,நஷ்டமோ இஞினியர்கள் இல்லாமல் மனிதனின் விஞ்ஞான வளார்ச்சி இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் இன்று EngineersDay என்பதால் ட்விட்டரில் # EngineersDay என்ற ஹேஷ்டேக்கி ட்ரெண்டிங்கிள் உள்ளது அதில் தங்கள் இஞ்சினியரிங் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள்.