அவரோடு நெருக்கமாக இருக்கக்கூடாது - த்ரிஷா யாரை சொல்கிறார் தெரியுமா?

Trisha Tamil Cinema Instagram
By Sumathi Nov 26, 2024 03:00 PM GMT
Report

த்ரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

த்ரிஷா

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப், அஜித்துடன் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.

trisha

அதுமட்டுமின்றி ஹிந்தியிலும், தெலுங்கிலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அது மட்டும் தெரிஞ்சிருந்தா.. ரஜினியோட நடிச்சிருக்கவே மாட்டேன் - குஷ்பூ பளீச்!

அது மட்டும் தெரிஞ்சிருந்தா.. ரஜினியோட நடிச்சிருக்கவே மாட்டேன் - குஷ்பூ பளீச்!

வைரல் போஸ்ட்

இந்நிலையில் அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டா போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், " உன்னை மனமுடைய செய்தவரிடம் நெருக்கமாக, நட்புடன் பழகும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் நாம் பழகக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா யாரை குறிப்பிட்டு இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என கேள்வி எழுப்பி கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.