ஹேக் செய்யப்பட்ட த்ரிஷாவின் எக்ஸ் பக்கம் - திடீரென வெளியான அந்த மாதிரி பதிவுகள்
நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா
சமூக வலைத்தளங்களில் சினிமா, விளையத்துறை சார்ந்த பிரபலங்களின் பக்கங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட X பக்கம்
த்ரிஷாவை எக்ஸ் தளத்தில் 6 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது அவரது புகைப்படம் மற்றும் அவர் நடிக்கும் படம் தொடர்பான பதிவுகளை வெளியிடுவார்.
இந்நிலையில் திடீரென த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் பிட்காயின் வாங்குவது தொடர்பான இணையதளத்தின் லிங்க் மீண்டும் மீண்டும் பதிவிடப்பட்டும், நீக்கப்பட்டும் வருகிறது.
இதனையடுத்து, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், கணக்கை மீட்கும் வரை அதில் வரும் பதிவுகள் எதுவும் நான் வெளியிடவில்லை எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா விளக்கமளித்துள்ளார்.