திரிஷாவிற்கு முதல்வர் ஆசை; அவரே சொன்ன தகவல் - வைரலாகும் வீடியோ

Trisha Viral Video Tamil Actress
By Karthikraja Jan 04, 2025 04:30 PM GMT
Report

தனக்கு முதல்வர் ஆக ஆசை உள்ளதாக திரிஷா கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

திரிஷா

1999 ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிஷா.

முதல்வர் திரிஷா

அதன் பிறகு தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து ஏறக்குறைய 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

முதலமைச்சர் ஆசை

தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் திரிஷா. இந்நிலையில் திரிஷா அளித்த பேட்டி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் பேசும் அவர், "எனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது" என தெரிவித்துள்ளார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் திரிஷா அளித்த பேட்டியாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விடுங்கள் என இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.