செல்லம்...எனக்கு தெரியும்..! Marriage Rumours - சஸ்பென்ஸ் உடைத்த திரிஷா..!
தனது திருமணம் குறித்தான செய்திகள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது குறித்து நடிகை திரிஷாவின் ட்வீட் தற்போது வைரலாகி வருகின்றது.
திரிஷா
தமிழ் சினிமாவில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கி தற்போதும் முன்னணி நாயகியாக வளம் வருபவர் திரிஷா. தமிழை கடந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பில் "லியோ" படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அஜித்தை நடிப்பில் துவங்கவுள்ள "விடாமுயற்சி" படத்திலும் அவரே நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
திரிஷா ட்வீட்
சில நாட்களாக நடிகை திரிஷா தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவி வந்தன. மலையாள திரையுலகை சேர்ந்தவர் தான் அந்த நபர் என்றும் தீவிரமாக செய்திகள் பரப்பப்பட்டன.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
— Trish (@trishtrashers) September 21, 2023
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!
இந்நிலையில், தற்போது இந்த செய்திகள் குறித்து திரிஷா தனது X தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார். அதில், அன்பே “நீங்களும் உங்கள் அணியும் யார் என்பது உங்களுக்குத் தெரியும் - அமைதியாக இருங்கள் மற்றும் வதந்திகளை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வெளியான செய்திகள் அனைத்தையும் திரிஷா புரளி என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.