அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே! உயரும் பெட்ரோல் விலை சைக்கிளுக்கு மாறிய திரிஷா!
நடிகை திரிஷா சைக்கிள் ஓட்டுவதற்கு தயாரான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் 90 கிட்ஸ் தொடங்கி 2k கிட்ஸ் வரை தனி ரசிகர் பட்டாளமே திரிஷாவுக்கு உள்ளது நாம் அறிந்ததே .
திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், சுகர், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சைக்கிள் ஒன்றை ஓட்ட தயாரான நிலையில், 'நல்ல மனநிலையில் இருந்து ஒரு சவாரி, இது என்னோட புதிய விஷயம்' எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் சைக்கிளுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் கவனம் ஈர்த்து வரும்நிலையில். திரிஷாவும் மறைமுகமாக அதை தான் சொல்கிறாரா என பயங்கரமாக யோசித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.