நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா உறுதி - மீண்டு வருவதாக உருக்கமான பதிவு

coronapositive actressTrisha நடிகை த்ரிஷா
By Petchi Avudaiappan Jan 07, 2022 05:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் மூன்றாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், பாதுகாப்பாக இருந்தபோதிலும் புத்தாண்டிற்கு முன்பாக எனக்கு கொரோனா உறுதியானது. உண்மையில் மோசமான ஒரு வாரமாக அது கடந்தது. இப்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து வரும் நான், ஓரளவு நன்றாக உணர்கிறேன். கொரோனா தடுப்பூசிக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் அனைவரும்கூட கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசத்தையும் மறக்க வேண்டாம்.

விரைவில் கொரோனா நெகட்டிவ் என்ற சந்தோஷ செய்தியுடன் வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது அக்கறை கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.