கோயில் சன்னதியில் செருப்பு காலுடன் வந்த த்ரிஷா : கொந்தளித்த வித்யா மண்டல் அமைப்பினர்

trisha ponniyinselvan
By Irumporai Sep 04, 2021 01:59 PM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில்  நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோயில்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கோயில் சன்னதியில் செருப்பு காலுடன் வந்த த்ரிஷா : கொந்தளித்த வித்யா மண்டல் அமைப்பினர் | Trisha Shooting For Ponniyin Selvan

கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. இந்த சிலைகளுக்கு நடுவில் த்ரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை த்ரிஷா மீதும், இயக்குனர் மணிரத்னம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டோர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.