வேறு வழியின்றி திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை திரிஷா - ரசிகர்கள் ஷாக்!

actress shocked fans trisha ready for marriage
By Anupriyamkumaresan Aug 31, 2021 10:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நீண்ட நாட்களாக திருமணம் வேண்டாம் என கூறி வந்த நடிகை திரிஷா, தற்போது அவரது திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டாராம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

இவர் பல ஆண்டுகளாக திருமணம் வேண்டாம் என்று கூறி சிங்கிளாகவே வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு ஒரு தலை காதல் ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். தற்போதும் பலர் திரிஷாவை கனவு கன்னியாக நினைத்து வருகின்றனர்.

வேறு வழியின்றி திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை திரிஷா - ரசிகர்கள் ஷாக்! | Trisha Ready For Her Marriage Fans Shocked

இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டதாகவும், உற்சாகமாக திருமண ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கனவு கன்னியை நினைத்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.