விஜய்யுடன் கரம் கோர்க்கும் த்ரிஷா; செம சர்ப்ரைஸ் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்யுடன் 6வது முறையாக த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம கெமிஸ்ட்ரி
தமிழில் கில்லி படத்தின் மூலம் நடிகை த்ரிஷா தான் விஜய்க்கு சரியான ஜோடி என ரசிகர்கள் கருதும் அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது. அதன்பின் திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் மீண்டும் இணைந்து நடித்தனர்.
அடுத்தடுத்து இந்த ஜோடி ஹிட் படங்களை கொடுத்தது. பிறகு பல ஆண்டுகள் கழித்து 5வது முறையாக கடந்த ஆண்டு லியோ படத்தில் த்ரிஷா விஜய்யுடன் இணைந்திருந்தார்.
தொடர்ந்து, த்ரிஷாவிற்கு அஜித்தின் விடாமுயற்சி, டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி, சிரஞ்சீவியின் பிரம்மாண்ட படம் என பல படங்கள் வரிசையாக கிடைத்துள்ளன.
கோட் படத்தில் த்ரிஷா
இந்நிலையில், மீண்டும் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடி என தகவல்கள் வெளியாகின.
தற்போது, த்ரிஷா கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.