தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறாரா த்ரிஷா? வைரலாகும் இன்ஸ்டகிராம் ஸ்டோரி

Vijay Trisha Instagram Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 26, 2024 03:27 PM GMT
Report

த்ரிஷாவின் இன்ஸ்டகிராம் ஸ்டோரியால் அவர் தவெக மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

தவெக மாநாடு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நாளை(27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் நடைபெற உள்ளது. 

தவெக மாநாடு

இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். மேலும் தனது கட்சி கொடி குறித்தும் விளக்கமளிக்க உள்ளார்.

மாநாட்டில் பிரபலங்கள்

இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மாநாட்டில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் விஷால், பிரேம்ஜி, சதீஸ், சீமான், சஞ்சீவ், தாடி பாலாஜி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

trisha in vijay tvk manadu

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி பட சூட்டிங்கில் உள்ள த்ரிஷா தற்பொது சென்னை கிளம்பி வந்துள்ளார்.

தவெக மாநாட்டில் த்ரிஷா

மேலும், த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தேன்குழல் சாப்பிட்டபடி ஒரு சிவப்பு மஞ்சள் கொடியை பதிவிட்டுள்ளார். இதனால் தவெக தொண்டர்கள் த்ரிஷா தவெக மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் அது ஸ்பெயின் நாட்டு கொடி என்றும், த்ரிஷா விளம்பர படப்பிடிப்புக்காகவே சென்னை வருவதாகவும், அதன் பின் மீண்டும் ஸ்பெயின் கிளம்பி விடுவார் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்நடித்த தி கோட் படத்தில் த்ரிஷா தவெக கொடி நிறத்தில் மஞ்சள் சிவப்பு என சேலை கட்டி வந்தது பேசுபொருளானது.