ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகை திரிஷா

Trisha Visa Golden
By Thahir Nov 04, 2021 05:02 AM GMT
Report

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றுள்ளார்.

அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது.

கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை திரிஷாவிற்கு இன்று ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.