தவெக முன்னிலை - விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை

Vijay Trisha Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 07:57 AM GMT
Report

நடிகை திரிஷா, தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். 

விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இதனையடுத்து, விஜய்யின் வீட்டிற்கு முன்பு தவெக தொண்டர்கள் குவிந்து கொண்டாடி வருகின்றனர். 

தவெக முன்னிலை - விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை | Trisha Came To Vijay House Amid Tvk Leads

இன்று திரிஷா தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இன்று அதிகாலையில் திரிஷா திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, தற்போது விஜய்யின் பனையூர்  வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

விஜய் வீட்டிற்கு மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.