தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷா - திருப்பதியில் சாமி தரிசனம்

Trisha
By Nandhini May 04, 2022 05:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷா 1983-ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார். பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா. ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது.

முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

இந்நிலையில், இன்று த்ரிஷா தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு ரங்கநாயகம் மண்டபத்தில் வைத்து தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனம் முடிந்து வெளியே வந்த த்ரிஷாவை பார்த்த ரசிர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.