3 மாநில சட்டமன்றத் தேர்தல் - மொத்தமாக தட்டித் தூக்கும் பாஜக?
3 வடகிழக்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், 2 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 60 சட்டப்பேரவை இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 30 தொகுதிகள் தேவை. 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

அதன்படி, நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி அதிகபட்சமாக 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உண்டாகியுள்ளது.
பாஜக முன்னிலை
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக பெரும்பான்மைக்கு சற்றும் குறைவாக 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி கூட்டணியும், புதிய கட்சியான TIPRAவும் ஆளும் பாஜகவுக்கு கடும் போட்டியை தந்து கொண்டிருக்கின்றன.
மேகாலயாவில் முதலமைச்சர் கார்னட் சங்மாவின் NPP கட்சி 23 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆச்சரியம் அளிக்கும் விதமாக இதர வேட்பாளர்கள் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.