பெட்ரோல் போட அரசு கட்டுப்பாடு - பைக்கிற்கு ரூ. 200க்கு மட்டுமே போட முடியும்
பெட்ரோல் தட்டுப்பாட்டால் பெட்ரோல் நிரப்புவதில் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயில்
சில நாட்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் உள்ள லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்திற்கு தேவையான பெட்ரோல் ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும் நிலையில், தற்போது ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் பெட்ரோல் அனுப்ப முடியாத நிலை உள்ளது.
பெட்ரோல் வாங்க கட்டுப்பாடு
ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரும் வரை இருப்பில் உள்ள பெட்ரோலையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் திரிபுராவில் பெட்ரோல் போடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நாளைக்கு இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.200க்கும், ஆட்டோவிற்கு ரூ.400க்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000க்கும் மட்டுமே பெட்ரோல் நிரப்ப முடியும்.
அரசு வாகனங்கள் மற்றும் அவசர சேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் தட்டுப்பாடு தொடரும் வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.