முதலமைச்சரை கொல்ல முயற்சி - நாட்டையே அதிர வைத்த சம்பவம்!

Attack Biplab Kumar Deb Tripura
By Thahir Aug 08, 2021 10:22 AM GMT
Report

நடைபயிற்சியின் போது முதல்வர் பிப்லப் தேவை கொல்ல முயற்சி நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரை கொல்ல முயற்சி - நாட்டையே அதிர வைத்த சம்பவம்! | Tripura Biplab Kumar Deb

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி செய்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து பிப்லாப் தேவ் அவர்கள் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர் கடந்த வியாழன் அன்று மாலை வழக்கம் போல் ஷியாமா பிரசாத் முகர்ஜி லேன் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவருடன் பாதுகாவலர்கள் சிலரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஒன்று முதல்வர் பிப்லாப் தேவ் மீது மோதுவது போல் வேகமாக வந்தது.

வேகமாக வரும் கார் சத்தம் கேட்டு முதல்வர் பிப்லாப் தேவ் சாலையோரம் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அந்த கார் அதிவேகமாக கடந்து சென்றுவிட்டது. இதில் முதல்வரின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார்.

அடுத்த சில வினாடிகளில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது. உடனே அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன.

சம்பந்தப்பட்ட வாகனத்தின் அடையாளங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் வியாழன் அன்று இரவே சம்பந்தப்பட்ட காரை மடக்கி பிடித்தனர். அதிலிருந்த மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த இளைஞர்கள் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் திரிபுரா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டவர்கள் மீது அதிவேகமாக கார் ஓட்டுதல், போலீசாரை தாக்கியது, முதல்வரின் பாதுகாவலர்களை காயப்படுத்தியது.

முதல்வரை கொல்ல முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூன்று இளைஞர்களின் வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனையும், விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.