ஒரே படம்தான்.. ஆனால், கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை இவர்தான் - யார் தெரியுமா?
Google
Bollywood
Indian Actress
By Sumathi
கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை குறித்துப் பார்ப்போம்.
நடிகை திரிப்தி டிம்ரி
அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரிப்தி சின்ன காட்சியில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
அனிமலால் பிரபலம்
இப்படத்திற்கு பிறகு, திரிப்தி டிம்ரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. கடந்த ஆண்டு, அவர் பேட் நியூஸ் மற்றும் பூல் புலையா 3 படங்களில் நடித்தார்.
தற்போது, சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட கதாநாயகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.