யூட்யூப் பார்த்து தற்கொலை... மாத கணக்கில் திட்டம் போட்ட 3 பேர்...

Youtube
By Petchi Avudaiappan May 24, 2022 04:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

புதுடெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  மஞ்சு என்ற பெண் தனது இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகியோருடன்  தங்கள் வீட்டில் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் கதவு ஜன்னல்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர்.

பின் வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உண்டாக்கியுள்ளனர். அந்த புகை சமையல் கியாஸ் சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு உருவாகியுள்ளது.அதனை சுவாசித்த மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.மஞ்சுவின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் மிகவும் கவலையுடனும், நிதி நெருக்கடியிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே  தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய 3 பேரும்  தற்கொலை செய்வது குறித்து பல மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். கடினமான முறையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி? என யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர். எந்த வகையிலும் தங்கள் உயிரை பிறர் காப்பாற்றிவிடக்கூடாது இப்படி செய்துள்ளனர். 

அவர்களது வீட்டில் இருந்து 2 செல்போன்கள், 9 தற்கொலை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதகவும் இவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகாவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தில் கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் உள்ளதால் எங்களை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். நாங்கள் வாழ விரும்பவில்லை. எங்களை காப்பாற்றுவது எங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். அது வாழ்வது மற்றும் சாவதை விட கொடூரமானது. கெஞ்சி கேட்கிறோம். எனவே உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.